ஆன்லைன் ஸ்டாப் வாட்ச் ⏱️

மில்லி விநாடிகள் மில்லி விநாடிகள்
மடியில் எண் மடியில் நேரம் மொத்த நேரம்

ஸ்டாப் வாட்ச் என்றால் என்ன?

ஸ்டாப் வாட்ச் என்பது தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே சென்ற காலத்தை துல்லியமாக அளவெடுக்கும் கருவியாகும்.

ஸ்டாப் வாட்ச் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1776ல் ஜான் மோயஸ் பூசாய் என்பவர் க்ரோனோக்ராப் என்ற கருவியை முதன்முதலில் கண்டுபிடித்ததாக நம்பப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான பதிவுகளின்படி நிக்கோலஸ் மேத்தியூ ரூசெக் என்பவர் 1821ல் அரசர் லூயி பிலிப்புக்கு குதிரை பந்தயங்களில் பயன்படுத்துவதற்காக கிரோனோகிராப்பை பரிசளித்துள்ளார். நவீன காலத்தின் முதல் ஸ்டாப் வாட்ச் பிரபல கடிகார தயாரிப்பாளரான டேக் ஹாயர்-ஆல் 1869ல் தயாரிக்கப்பட்டது.

ஸ்டாப் வாட்சை பயன்படுத்துவது எப்படி?

ஸ்டார்ட் பட்டனை அழுத்தியவுடன் ஸ்டாப் வாட்ச் காலத்தை அளவெடுக்க தொடங்கும். அளவெடுக்கும் தேவை முடிந்ததும், ஸ்டாப் பட்டனை அழுத்தி மொத்த நேரத்தை சேமிக்கலாம். பின்னர், ரீசெட் பட்டனை அழுத்தி அளவெடுத்த நேரத்தை ரீசெட் செய்யலாம்.

ஸ்டாப் வாட்ச்சை எங்கே பயன்படுத்துவது?

ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், நீச்சல் பந்தயம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் ஸ்டாப் வாட்ச் பயன்படுகிறது. இவை மட்டுமன்றி திறமையை சோதிக்க நேரத்தை கணக்கெடுக்கவேண்டிய அவசியம் எங்கு ஏற்பட்டாலும் ஸ்டாப் வாட்ச்சை பயன்படுத்தலாம்.

ஸ்டாப் வாட்ச்சுக்கும் டைமருக்கும் என்ன வித்தியாசம்?

பந்தயங்களில் கடந்த நேரத்தை கணக்கிடவும் ஸ்டாப் வாட்ச் பயன்படுகிறது. ஆனால் டைமர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நேரத்தை கணக்கிட்டு, அது முடிந்ததும் நின்றுவிடும்.சுருக்கமாக சொன்னால், டைமர் காலத்தை தலைகீழாகவும், ஸ்டாப் வாட்ச் காலத்தை நேரடியாகவும் கணக்கிடுகின்றன.

என் கம்ப்யூட்டரில் ஸ்டாப் வாட்ச் எங்கே இருக்கிறது?

ஆன்லைன் ஸ்டாப் வாட்ச் மூலம் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் ஸ்டாப் வாட்சை பயன்படுத்தலாம். நீங்கள் விண்டோஸ் 10 பயன்படுத்தினால், "ஸ்டார்ட்" மெனுவில் அலாரம் என்று டைப் செய்து “Alarms & Clock (கடிகாரம்)”-ஐ அழுத்தி, பின் வரும் விண்டோவில் ஸ்டாப் வாட்ச் டேப்பை அழுத்தலாம்.

ஆன்லைன் ஸ்டாப் வாட்ச் என்றால் என்ன?

மணி, நொடி, மில்லிசெகண்ட் அளவில் நேரத்தை அளவிட உதவும் எளிய டைமர் தான் ஆன்லைன் ஸ்டாப் வாட்ச்.

ஆன்லைன் ஸ்டாப் வாட்சை பயன்படுத்துவது எப்படி?

ஆன்லைன் ஸ்டாப் வாட்சை பயன்படுத்த, முதலில் "ஸ்டார்ட்" பட்டனை அழுத்தவும். தாங்கள் அளவிட விரும்பும் நேரம் ஆனபின் "பாஸ்" பட்டனை அழுத்தி டைமரை நிறுத்தலாம். அல்லது, "லேப்" பட்டனை அழுத்தி அடுத்த சுற்றுக்கான நேரத்தை கணக்கிடலாம்.